Oct 17, 2026
Thisaigal NewsYouTube

பினாங்கில் நான்கு மிகப்பெரிய நீர் விநியோகத்திட்டங்கள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பினாங்கில் நான்கு மிகப்பெரிய நீர் விநியோகத்திட்டங்கள்

பினாங்கு, நவ.8-


பினாங்கில் நான்கு மிகப்பெரிய நீர் விநியோகத் திட்டங்களை அமல்படுத்த பினாங்கு நீர் விநியோக கழகமும், மாநில அரசாங்கமும் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படவுள்ளன.

இத்திட்டங்களில் ஒன்றான மெங்குவான் அணைக்கட்டின் விரிவாக்கத்திட்டமான எம்டிஇபி கட்டம் 2 சி. இன் கீழ் லஹார் யூ.ஐ.பம் ஹவுஸ், விரிவாக்கப்பட்ட மெங்குவான் அணையை மீண்டும் நிரப்ப சுங்கை மூடாவிலிருந்து நாள் ஒன்றுக்கு கூடுதலாக 440 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்படாத நீரை விநியோகிக்க வல்லதாக இருக்கும்.

இது 86.4 பில்லியன் லிட்டர் கொள்ளவை கொண்டது. பினாங்கில் அச்சுறுத்தும் வறட்சி நிலையின் போது அவசர நிலையின் தினசரி பயன்பாட்டிற்கு போதுமான நீரை விநியோகிக்கும் ஆற்றலைக்கொண்ட அணைக்கட்டாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இரண்டு சிறு அணைக்கட்டு திட்டங்களுக்கான நிதியையும் பினாங்கு நீர் விநியோக கழகம், மத்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →