கிள்ளான் மாநகர மன்றத்தின் சோதனையின் போது 'ராக்கி' என்ற தெருநாய் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு, நேற்று இரவு மாவட்டப் போலீஸ் தலைமையகத்திற்கு வெளியே பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ள கிள்ளான் செலாத்தான் மாவட்டப் போலீஸ் தலைவர் உதவி ஆணையர் Lim Jit Huey, இச்சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் சட்டப் பிரிவு 428-இன் கீழ் ஏற்கனவே விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். எந்தவொரு தரப்பிற்கும் சாதகமாக இல்லாமல், இந்த விசாரணை முற்றிலும் நியாயமாகவும், வெளிப்படையாகவும், தொழில்முறைத் திறனோடும் நடத்தப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
தற்போது சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த அறிக்கை அரசு தரப்பு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளையில், அரசு வளாகங்களுக்கு வெளியே பொதுமக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அது பொதுச் சேவைகளுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறை ஏற்படுத்தும் என்றும் அவர் அறிவுறுத்தினார். பொதுமக்கள் அனைவரும் அமைதி காத்து, சட்டப்பூர்வ விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.








