ஷா ஆலாம், ஆகஸ்ட்.02-
சுட்டெரிக்கும் வெயில் 10 இடங்களில் கடுமையாக இருக்கும் என்று மலேசிய வானிலைத் துறை எச்சரித்துள்ளது.
தீபகற்ப மலேசியாவிலும், சபா சரவாவில் வெயிலின் தன்மை, 35 முதல் 37 பாகை செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கடும் வெயில் குறைந்தபட்சம் அடுத்த மூன்று நாட்களுக்கு நீட்டிக்கும். பொதுமக்கள் சற்று எச்சரிக்கையாக இருக்கும்படி அது அறிவுறுத்தியுள்ளது.








