Sep 27, 2026
Thisaigal NewsYouTube
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 3 நாள் பயணமாக மலேசியா வருகை
தற்போதைய செய்திகள்

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 3 நாள் பயணமாக மலேசியா வருகை

Share:

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக இன்று மலேசியா வந்தடைந்தார். மாலை 5:15 மணியளவில் விமானப்படைத் தளத்தில் இறங்கிய அவரை, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை துறை அமைச்சர் ஆர்தர் ஜோசப் குருப் வரவேற்றார்.

நாளை புத்ராஜெயாவில் அவருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, பிரதமர் டததோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இருதரப்பு உறவுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றம் மற்றும் எரிபொருள் பாதுகாப்பு குறித்து அவர் ஆலோசிக்க உள்ளார்.

முக்கியமாக, உலகப் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். ஆஸ்திரேலியா மலேசியாவின் 12-வது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்