May 4, 2026
Thisaigal NewsYouTube
புதிய ஊழல் விசாரணை நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக Noor Ruwena Md Nurdin நியமனம்
தற்போதைய செய்திகள்

புதிய ஊழல் விசாரணை நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக Noor Ruwena Md Nurdin நியமனம்

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி.19-

ஊழல் வழக்குகளுக்கான தீர்ப்புகளை விரைவாக உறுதிச் செய்வதற்காக, புதிதாக நிறுவப்பட்ட சிறப்பு ஊழல் விசாரணை உயர் நீதிமன்றத்திற்கு, தலைமை வகிக்க, கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி Noor Ruwena Md Nurdin நியமிக்கப்பட்டுள்ளார்.

வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், அவர், புதிய பொறுப்பை ஏற்பார் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி பொறுப்பை, ஷா ஆலம் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அஸ்லாம் ஸைனுடினும், அவருக்குப் பதிலாக ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு, ஜோகூர் பாரு உயர் நீதிமன்ற நீதிபதி நோர் ஹிஷாம் இஸ்மாயிலும் பொறுப்பேற்பார்கள் என்றும் சுற்றறிக்கைத் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், இந்த இடமாற்ற உத்தரவு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, நீதிபதிகள் தங்களின் அனைத்து விசாரணை வழக்குகளையும் நிறைவுச் செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related News