Jan 19, 2026
Thisaigal NewsYouTube
சயாம் மரண ரயில் பாதைத் திட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு பினாங்கு, பிறையில் நினைவிடம் துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமியின் அடுத்தக் கட்ட முன்னெடுப்பு
தற்போதைய செய்திகள்

சயாம் மரண ரயில் பாதைத் திட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு பினாங்கு, பிறையில் நினைவிடம் துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமியின் அடுத்தக் கட்ட முன்னெடுப்பு

Share:

இரண்டாம் உலகப் போரில் நடந்த மிகத் துயரமான மனித வதை என்று வர்ணிக்கப்படும், சயாம் மரண ரயில் பாதை நிர்மாணிப்புத் திட்டத்தில், உயிர் நீத்தவர்களுக்கு, ஒரு நினைவிடத்தை எழுப்ப பினாங்கு, பிறையில் ஓர் இடம் அடையாளம் காணப்படும் என்று பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. ராமசாமி தெரிவித்துள்ளார்.

ஜப்பானியர்களால், வலுக்கட்டாயமாக மலாயாவிலிருந்து கொண்டுச் செல்லப்பட்ட சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்களில், பெரும்பாலோர் தமிழர்கள் ஆவர்.

நோயினாலும், பசியாலும், சித்ரவதையினாலும் சொல்லொன்ன துயரத்துக்கு ஆளாகி, பல்லாயிரக் கணக்கானோர் நாடு திரும்ப முடியாமல் அங்கேயே மரணித்தனர்.

இத்துயரச் சம்பவம் நிகழ்ந்து, கிட்டத்தட்ட 78 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், சயாம் மரண ரயில்வே திட்டத்தில் இறந்தவர்கள் மீது ஆர்வம் கொண்டிருக்கும் ஒரு குழுவுக்கு தலைமையேற்றுள்ள, P.சந்திர சேகரன் என்பவர் , ஒரு நினைவிடம் அமைப்பது குறித்த ஒரு பரிந்துரையை தம்மிடம் முன்வைத்திருப்பதாக பினாங்கு துணை முதல்வர் டாக்டர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

சந்திரசேகரனின் இந்தப் பரிந்துரையைத் தாம் வரவேற்றதுடன், தமது சட்டமன்ற தொகுதியான பினாங்கு, பிறையில் ஓர் இடத்தில் அந்த நினைவிடம் எழுப்பப்பட்டால், பொருத்தமாக இருக்கும் என்று அவரிடம் பரிந்துரைத்ததாக டாக்டர் ராமசாமி குறிப்பிட்டார்.

அதன் அடிப்படையில், சயாம் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்காக ஒரு நினைவிடத்தை எழுப்புவதற்குப் பிறையில் ஓர் இடம் அடையாளம் காணப்படும் என்று டாக்டர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

Related News