Sep 12, 2026
Thisaigal NewsYouTube
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயக் கட்டுமானப் பணி துரிதம்! நேரில் ஆய்வு செய்தார் கோபிந்த் சிங்
தற்போதைய செய்திகள்

தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயக் கட்டுமானப் பணி துரிதம்! நேரில் ஆய்வு செய்தார் கோபிந்த் சிங்

Share:

கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் இடமாற்றம் செய்யப்படவுள்ள தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் புதிய கட்டுமானப் பணியை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று காலை நேரில் பார்வையிட்டார்.

அதற்கு முன்னதாக, பழைய இடத்தில் அமைந்துள்ள தேவிஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்த அவருக்கு, ஆலய நிர்வாகத்தினர் உரிய மரியாதை அளித்தனர்.

பின்னர் புதிய ஆலயக் கட்டுமானப் பகுதிக்கு சென்ற அமைச்சருக்கு, ஆலயத் தலைவர் டாக்டர் பார்த்திபன் கண்மணி, கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கம் அளித்தார்.

கட்டுமானப்பணிகளை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோபிந்த் சிங், அடிப்படை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, தற்போது முதல் தளத்தின் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து கூரை அமைப்பு, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் கட்டுமானப் பணிகள் சுமூகமாக நடைபெற்று வருவதாகக் கூறிய அவர், ஆலயம் விரைவில் நிறைவடைவதை உறுதிசெய்ய தொழில்நுட்ப விவகாரங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் நல்ல முறையில் நடைபெற்று வருவதற்கு உரிய ஒத்துழைப்பை நல்கி வரும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கும், பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சுக்கும் அமைச்சர் கோபிந்த் சிங் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இதனிடைய தற்போது ஆலயக் கட்டுமானத்தின் ஒரு கட்டடப் பகுதி மட்டுமே நிறைவடைந்துள்ளது. அந்தக் கட்டடத்தை முழுமையான ஆலய வடிவத்திற்கு கொண்டு வருவதற்கான திருப்பணிகள், தேர்ச்சி பெற்ற ஸ்தபதிகளின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்குப் பெருமளவில் நிதி தேவைப்படுகிறது என்று ஆலயத் தலைவர் டாக்டர் பார்த்திபன் கண்மணி தெரிவித்தார்.

அந்த நிதியைத் திரட்டுவதற்கும், அதற்கான பல்வேறு நிதி திரட்டும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கும் ஆலய நிர்வாகம் தனி செயற்குழு ஒன்றை அமைத்துள்ளதாக டாக்டர் பார்த்திபன் விவரித்தார்.

ஆலய கட்டுமானத்திற்கும், திருப்பணிகளுக்கும் தேவையான நிதியை திரட்டுவதற்கு விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்வதற்கு ஆலய நிர்வாகம் திட்டம் கொண்டு இருப்பதாக டாக்டர் பார்த்திபன் குறிப்பிட்டார். அது குறித்து அமைச்சருக்கு விளக்கம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி