Sep 15, 2026
Thisaigal NewsYouTube
15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: 23 வயது ஆடவருக்கு தண்டனை குறைப்பு
தற்போதைய செய்திகள்

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: 23 வயது ஆடவருக்கு தண்டனை குறைப்பு

Share:

குவாந்தானில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட 23 வயது ஆடவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை மற்றும் 6 பிரம்படி தண்டனையை, அம்மாநில உயர்நீதிமன்றம் ஓராண்டு சிறை மற்றும் 2 பிரம்படியாக குறைத்துள்ளது.

இந்த வழக்கில், குற்றம் நடந்த போது அந்த நபருக்கு 19 வயது என்றும், கடந்த 2022-ஆம் ஆண்டு, அக்டோபர் 8 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இச்சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இரண்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என அம்மாநில செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை மற்றும் 3 பிரம்படிகள் என, தண்டனைகளை தொடர்ச்சியாக அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.

இதனை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீட்டை விசாரித்த நீதித்துறை ஆணையர் சம்ரி மஸ்ரி, குற்றம் செய்தபோது அவருக்கு இளம் வயது என்பதாலும், இது அவரது முதல் குற்றம் என்பதாலும் அவரது தண்டனையை குறைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், சிறுமியின் வயது காரணமாக அவரது சம்மதம் சட்டரீதியாக பொருந்தாது என்றும், குற்றவாளியின் தண்டனை தனிப்பட்ட சூழ்நிலைகளை கருத்தில் கொண்டே நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு திட்டமிட்ட பாலியல் வேட்டையாடல், கட்டாயப்படுத்தல் அல்லது சுரண்டல் போன்ற தன்மை கொண்ட வழக்குகளிலிருந்து வேறுபட்டது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

Related News

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

திரெங்கானுவில் யானை மீது கார் மோதி விபத்து - 3 பேர் காயம்

திரெங்கானுவில் யானை மீது கார் மோதி விபத்து - 3 பேர் காயம்

புகாரி இகுய்டி வழக்கு: நான்கு குற்றச்சாட்டுகளில் இருந்து முகைதீன் யாசின் விடுதலை

புகாரி இகுய்டி வழக்கு: நான்கு குற்றச்சாட்டுகளில் இருந்து முகைதீன் யாசின் விடுதலை