கோலாலம்பூர், ஆகஸ்ட்.02-
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு ரஷ்யாவிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்ளவிருக்கிறார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பை ஏற்று மாமன்னர் ரஷ்யாவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
மலேசிய வரலாற்றில் மாமன்னர் ஒருவர், ரஷ்யாவிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
மலேசியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் கடந்த 1967 ஆம் ஆண்டு தூதரக உறவு மலர்ந்தது. இந்த 58 ஆண்டு காலக் கட்டத்தில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் ரஷ்யப் பயணமே, முதலாவது அதிகாரத்துவ வருகையாகும் என்று இஸ்தானா நெகாரா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாமன்னரின் இந்த அதிகாரத்துவ வருகை மலேசியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான இரு வழி உறவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








