கிளந்தான், கோத்தா பாரு அருகே புலி நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அதன் நடமாட்டத்தை கண்காணிக்கும் நடவடிக்கையை பெர்ஹிலித்தான் எனப்படும் வனவிலங்கு தேசிய பூங்கா துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
குவா மூசாங் – ஜெலி சாலையில் புலி நடமாட்டம் இருப்பதாக நேற்று காலை 11 மணியளவில் தாங்கள் புகார் பெற்று இருப்பதாக கிளந்தான் மாநில பெர்ஹிலித்தான் தலைவர் முகமட் ஹாஃபிட் ரோஹனி தெரிவித்துள்ளார்.
பெரிய உருவமைப்பைப் கொண்ட அந்த புலியை , கிளந்தான் டபோங், கம்போங் லத்தா கெர்த்தாஸ் அருகில் பொது மக்கள் பார்த்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.
நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் ஜெலி நகரிலிருந்து குவா மூசாங் சென்று கொண்டிருந்த ஐஸ் லோரி ஓட்டுநர் புக்கிட் மெரந்தோ அருகே ஒரு பெரிய புலி,சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்ததைத் பார்த்ததாக புகார் அளித்துள்ளார்.
சாலையில் நடந்து செல்லும் அந்த புலியை தனது லோரியின் டேஸ்க் போட் கேமராவில் பதிவு செய்த ஓட்டுநர், அந்த காணொளியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


