கோலாலம்பூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற 'வசானா இல்மியா பெர்தானா' என்ற பொதுக் கருத்தரங்கில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர், டான்ஸ்ரீ அசாம் பாக்கி உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீர் இடையூறு ஏற்பட்டது.
அசாம் பாக்கி தனது தொடக்க உரையை நிகழ்த்திக்கொண்டிருந்த வேளையில், இரண்டு நபர்கள் பதாகைகளை ஏந்தியபடி அரங்கிற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த எதிர்பாராத சூழலிலும் சற்றும் நிலைகுலையாமல், மிகவும் நிதானமாகவும் தொழில்முறைப் பண்புடனும் அசாம் பாக்கி நிலைமையைக் கையாண்ட விதம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
அசாம் பாக்கியின் இந்தப் பண்பைப் பாராட்டிய பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் யாங் செபுரா ஓத்மான் , ஜனநாயக நாட்டில் எதிர்ப்பு தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்றாலும், இது போன்ற கல்வி சார்ந்த தளங்களில் இடையூறு செய்வது முறையல்ல என்று குறிப்பிட்டார்.
அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அசாம் பாக்கி தனது உரையைத் தொடர்ந்து முடித்த விதம் அவரது அர்ப்பணிப்பைக் காட்டுவதாகக் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்."








