ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.18-
ஒரு பாரந்தூக்கி லோரி உட்பட 11 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து இன்று காலை 9 மணியளவில் ஜோகூர் பாரு, ஜாலான் கெபுன் லாமாவில் ஓர் உணவகத்தின் முன் நிகழ்ந்தது.
ஒரு கிரேன் லோரி, 6 கார்கள், 4 மோட்டார் சைக்கிள்கள் இவ்விபத்தில் சம்பந்தப்பட்டு இருந்ததாக லார்கின் தீயணைப்பு நிலைய கமாண்டர் இன்ரா சாரேல் பாக்கார் தெரிவித்தார்.
தகவல் கிடைத்து மூன்று தீயணைப்பு வண்டிகளுடன் 11 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதில் சொற்ப காயங்களுக்கு ஆளான நான்கு மாட்டார் சைக்கிளோட்டிகள் அம்புலன்ஸ் வண்டிகள் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








