பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகள் பாரபட்சமாக நடத்தப்படுவதை தடுப்பதற்கு தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டிய அவசியமில்லை என்று மனித வள அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளிகளுக்காக சில நாடுகளில் பிரத்தியேக சட்டங்கள் இயற்றப்பட்டாலும் மலேசியாவில் அதற்கான அவசியம் இல்லை. மிக குறைந்த எண்ணிக்கையிலேயே பாரபட்ச போக்குத் தொடர்புடைய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவகுமார் விளக்கினார்.
உடல் மற்றும் மனோரீதியாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அநீதி இழைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு ஆஸ்திரேலியா, கனடா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் அத்தகைய தடுப்புச் சட்டம் இருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.








