ஜார்ஜ்டவுன், அக்டோபர்.16-
வரும் அக்டோபர் 20-ஆம் தேதி, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மலேசியர்களுக்கு இலவசப் படகுச் சேவையை வழங்குவதாக பினாங் போர்ட் கமிஷன் அறிவித்துள்ளது.
இது குறித்து பினாங் போர்ட் கமிஷன் மற்றும் பினாங் போர்ட் சென்டிரியான் பெர்ஹாட் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியர்கள் இந்த இலவசப் படகுச் சேவையைப் பயன்படுத்திக் கொண்டு, தீபாவளியைக் கொண்டாடலாம் என்று தெரிவித்துள்ளது.
அதே வேளையில், தற்போதுள்ள படகுச் சேவை அட்டவணையின் படி, பயணங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது.








