பாலிக் பூலாவ், அக்டோபர்.03-
14 வயது மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாகக் கூறப்படும் பினாங்கு, செபராங் பிறையைச் சேர்ந்த ஓர் இடைநிலைப்பள்ளி ஆசிரியர், கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக நான்கு நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
32 வயதுடைய அந்த ஆசிரியர், இன்று வெள்ளிக்கிழமை மாஜிஸ்திரேட் சியா ஹுயே திங் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வரை காவலில் தடுத்து வைப்பதற்கான அனுமதியைப் போலீசார் பெற்றனர்.
சம்பந்தப்பட்ட இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி, போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து அந்த ஆசிரியர், பாராட் டாயா மாவட்ட போலீஸ் நிலையத்தில் சுயமாக முன்வந்து சரண் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அந்த மாணவியைத் தனது காரில் அழைத்து சென்றதாகக் கூறப்படும், ஆசிரியர், பாலிக் பூலாவ், பெர்சியாரான் பாயான் இண்டாவில் ஒரு பேரங்காடியின் வாகனம் நிறுத்தும் இடத்தில் இத்தகையத் தகாதச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.








