Oct 10, 2026
Thisaigal NewsYouTube

சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ளாததற்கு, சுகாதாரம் சார்ந்த அறிவும் விழிப்புணர்வும் குறைவு – அமைச்சர் டாக்டர் சுல்கிஃப்லி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ளாததற்கு, சுகாதாரம் சார்ந்த அறிவும் விழிப்புணர்வும் குறைவு – அமைச்சர் டாக்டர் சுல்கிஃப்லி

சிரம்பான், ஜூன்.15-

மலேசியாவில் ஒரு சிலர் வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ளாததற்கு, சுகாதாரம் தொடர்பான குறைந்த விழிப்புணர்வே காரணம் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார். பெரும்பாலான மக்கள் ஒரு குறிப்பிட்ட நோய் உறுதிச் செய்யப்பட்ட பின்னரே சிகிச்சைப் பெறுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

சமீபத்திய தேசிய சுகாதார ஆய்வின்படி, நாட்டின் ஒவ்வொரு மூன்று பெரியவர்களில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தமும் அளவுக்கு அதிகமான கொழுப்பும் உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது, மேலும் ஒவ்வோர் ஆறு பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் கண்டுள்ளது. சுகாதார அமைச்சு, தேசிய சுகாதார அறிவுக் கொள்கையைச் செயல்படுத்துவதன் மூலம் மக்களை அடிப்படை சுகாதார அறிவும் திறன்களும் கொண்டவர்களாக மாற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →