Oct 10, 2026
Thisaigal NewsYouTube

போலீஸ் துரத்தல்: 10 குற்றப் பதிவுகளைக் கொண்ட ஆடவர் மீது துப்பாக்கிச்சூடு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போலீஸ் துரத்தல்: 10 குற்றப் பதிவுகளைக் கொண்ட ஆடவர் மீது துப்பாக்கிச்சூடு

பெட்டாலிங் ஜெயா பகுதியில் இருந்து சுங்கை பூலோ நோக்கி ஆபத்தான முறையில் புரோட்டோன் வீரா காரை ஓட்டிச் சென்று, மற்ற வாகனங்கள் மீது மோதியபடி போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற 30 வயதுடைய ஆடவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் காயமடைந்தார்.

இது குறித்து பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷாம்சுடின் மாமாட் கூறுகையில், காயமடைந்த அந்த ஆடவர் மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அவருக்கு ஏற்கெனவே 10 குற்றப் பதிவுகள் உள்ள நிலையில், அவற்றில் ஆறு போதைப்பொருள் தொடர்பான வழக்குகளும், நான்கு குற்றவியல் வழக்குகளும் அடங்கும்.

மேலும், அவர் ஓட்டி வந்த காரில் போதைப்பொருட்களும், கைத்துப்பாக்கியைப் போன்ற பொம்மை ஆயுதமும் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில் போலீஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்தார்.

இந்நிலையில், இச்சம்பவத்தை அரசு ஊழியரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்துதல், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களின் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →