Oct 10, 2026
Thisaigal NewsYouTube

சீனப் பெண்ணின் விடுதி அறைக்குள் அத்துமீறி நுழைந்த குடியேறி: 2 ஆண்டுகள் சிறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சீனப் பெண்ணின் விடுதி அறைக்குள் அத்துமீறி நுழைந்த குடியேறி: 2 ஆண்டுகள் சிறை

செம்போர்னா பகுதியில், சீனாவைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவரின் தங்கும் விடுதி அறைக்குள் அத்துமீறி நுழைந்த சட்டவிரோதக் குடியேறிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமீர் கஹால் என்பவருக்கு கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி செம்போர்னா மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி டோன் ஸ்டீவின் மலான்ஜூம் இந்தத் தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்தார்.

கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில், அந்தச் சுற்றுலாப் பெண் தங்கியிருந்த விடுதி அறைக்குள் அமீர் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகின்றது.

மேலும், அப்பெண்ணிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கானது குற்றவியல் பிரிவு 354-ன் கீழ் இந்த விவகாரம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாக செம்போர்னா மாவட்ட போலீஸ் தலைவர் டான் ஹியாப் வா தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →