Oct 10, 2026
Thisaigal NewsYouTube

யோங் பெங்கில் கோர விபத்து: 22 வயது இளம்பெண்கள் இருவர் உடல் கருகி உயிரிழப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
யோங் பெங்கில் கோர விபத்து: 22 வயது இளம்பெண்கள் இருவர் உடல் கருகி உயிரிழப்பு

ஜோகூர் மாநிலம், பத்து 1, ஜாலான் யோங் பெங்-ஆயர் ஹீத்தாம் பகுதியில் நேற்று பிற்பகல் கார் ஒன்று லாரியுடன் மோதி தீப்பிடித்ததில், 22 வயதுடைய இளம்பெண்கள் இருவர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பெரோடுவா மைவி காரை ஓட்டிச் சென்ற சித்தி நூர் பட்ரிஷா முஹமட் காலிட் மற்றும் முன் இருக்கையில் பயணித்த சித்தி நுர்மைசாரா அப்துல் ஜாலில் ஆகிய இருவரும் இந்த விபத்தில் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து பிற்பகல் 4.21 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததாக ஆயர் ஹீத்தாம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் செயல்பாட்டுப் பிரிவு தலைவர் முஹமட் ஷாமின் முஹமட் சலிகின் தெரிவித்துள்ளார்.

இவ்விபத்தில், காரானது, சுமார் 80 சதவீதம் தீயில் எரிந்திருந்ததுடன், ஓட்டுநர் மற்றும் முன் பயணியர் இருக்கைகளில் இருந்த இருவரும் காருக்குள் சிக்கியிருந்தனர்.

தீயை அணைத்த பின்னர், சிறப்பு மீட்புக் கருவிகள் மூலம் இருவரும் மீட்கப்பட்டனர்.

எனினும், உடல் கருகிய நிலையில் காணப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சுகாதார அமைச்சக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் மேல்நடவடிக்கைக்காகக் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →