மக்கள் வீட்டுத் திட்டங்களான ரூமா மெஸ்ரா ரக்யாட், புரோகிராம் ரெசிடென்சி ரக்யாட் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்த 2027ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 1 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் முதற்கட்டப் பதிவுகள் வரும் திங்கட்கிழமை முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜோகூரின் கூலாய், நெகிரி செம்பிலானின் நீலாய், மலாக்காவின் பாயா ரூம்புட், திரெங்கானுவின் லெம்பா பெத்தாங் ஆகிய நான்கு இடங்களில் புதிய வீடமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
முதல் வீடு வாங்குவோருக்கு உதவும் வகையில், ஷாரிகாட் ஜமினான் கிரேடிட் பெருமாஹான் நிறுவனம் 20 பில்லியன் ரிங்கிட் வரையிலான வீட்டுக் கடன் உத்தரவாதத்தை வழங்கவுள்ளது. இதன்மூலம் சுமார் 80,000 பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 5 லட்சம் ரிங்கிட் வரையிலான விலைகொண்ட முதல் வீட்டை வாங்குவோருக்கு, கடன் ஒப்பந்தம் மற்றும் உரிமை மாற்ற ஆவணங்களுக்கான முத்திரைத் தீர்வை முழுமையாக விலக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.








