சிலாங்கூர், ஷா ஆலாம், அலாம்புடிமான் பகுதியில் 11 கார்கள், 10 டன் லாரி என மொத்தம் 12 வாகனங்கள் மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். மேலும் இருவர் சொற்ப காயமடைந்தனர்.
தலையில் பலத்த காயமடைந்த ஆண் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். தலையில் காயமடைந்த பெண் ஒருவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் சிலர் வாகனங்களுக்குள் சிக்கிக் கொண்டதால், தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்டனர்.
இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.31 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, புக்கிட் ஜெலுத்தோங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிர்ப்புறப் பாதையில் பாய்ந்து வாகனங்கள் மீது மோதியதாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.








