Oct 9, 2026
Thisaigal NewsYouTube

அரசு ஊழியர்களுக்கு தலா 1,500 ரிங்கிட் சிறப்பு உதவி; ஓய்வூதியதாரர்களுக்கு 750 ரிங்கிட்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அரசு ஊழியர்களுக்கு தலா 1,500 ரிங்கிட் சிறப்பு உதவி; ஓய்வூதியதாரர்களுக்கு 750 ரிங்கிட்

அடுத்த ஆண்டு 13 லட்சம் அரசு ஊழியர்களுக்கு தலா 1,500 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி வழங்கப்படும். இதில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களும் அடங்குவர்.

2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த உதவித்தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்படும். முதல் தவணை ஹரி ராயா ஐடில்ஃபித்ரிக்கு முன்னரும், இரண்டாவது தவணை மலேசியாவின் 70ஆவது தேசிய தினத்தை முன்னிட்டும் வழங்கப்படும்.

மேலும், ஓய்வூதியம் பெறும் முன்னாள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறாத முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கு தலா 750 ரிங்கிட் சிறப்பு உதவி வழங்கப்படும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →