2027ஆம் ஆண்டு பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது உரையில் திருவள்ளுவரின் திருக்குறள் 731ஆம் குறளை மேற்கோள் காட்டினார்.
திருக்குறளின் 74ஆவது அதிகாரமான ‘நாடு’ பகுதியில் இடம்பெறும், “தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு” என்ற குறள், சிறந்த நாட்டுக்கான அடிப்படை அம்சங்களை எடுத்துரைக்கிறது என்றார்.
வளமான விளைச்சல், தகுதியும் அறிவும் கொண்ட மக்கள், குறைவில்லாத செல்வ வளம் ஆகியவை ஒன்றிணைந்திருப்பதே சிறந்த நாடு என்பதே இக்குறளின் பொருளாகும்.








