Oct 9, 2026
Thisaigal NewsYouTube

லங்காவி, லாபுவான் தீவுகளில் வரியில்லா பொருள் வாங்கும் வரம்பு 10,000 ரிங்கிட்டாக உயர்வு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லங்காவி, லாபுவான் தீவுகளில் வரியில்லா பொருள் வாங்கும் வரம்பு 10,000 ரிங்கிட்டாக உயர்வு

லங்காவி, லாபுவான் தீவுகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் வரியில்லாமல் பொருட்கள் வாங்குவதற்கான வரம்பு அடுத்த ஆண்டு 10,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படும். இதற்குக் குறைந்தது 48 மணி நேரம் அந்தத் தீவுகளில் தங்கியிருக்க வேண்டும்.

2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இரு தீவுகளிலும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதுடன், உள்ளூர் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் நோக்கில், லங்காவியில் தயாரிக்கப்படும் மேலும் பல பொருட்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →