Oct 9, 2026
Thisaigal NewsYouTube

இந்தியச் சமூகத்துக்கு மித்ரா மூலம் 150 மில்லியன் ரிங்கிட்; தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மில்லியன், வழிபாட்டுத் தலங்களுக்கு 80 மில்லியன் ரிங்கிட்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இந்தியச் சமூகத்துக்கு மித்ரா மூலம் 150 மில்லியன் ரிங்கிட்; தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மில்லியன், வழிபாட்டுத் தலங்களுக்கு 80 மில்லியன் ரிங்கிட்

இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டுக்காக மித்ராவுக்கு 150 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்புக்கு 50 மில்லியன் ரிங்கிட்டும், முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 80 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.

மித்ராவுக்கு 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் முதலில் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது. பின்னர், கடந்த மே மாதம் கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட் அறிவிக்கப்பட்டதால், அந்த ஆண்டின் மொத்த ஒதுக்கீடு 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்தது.

தற்போது 2027ஆம் ஆண்டுக்கும் 150 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி இந்திய இளைஞர்களுக்கான திறன் பயிற்சி, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும்.

மேலும், இந்தியச் சிறு தொழில்முனைவோருக்கான தெக்குன் மற்றும் அமானா இக்தியார் மலேசியா (AIM) திட்டங்களுக்கு 150 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப்பள்ளிகளின் கட்டடப் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புக்கு 50 மில்லியன் ரிங்கிட்டும், சீனப்பள்ளிகளுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டும், தேசியப் பள்ளிகளுக்கு 900 மில்லியன் ரிங்கிட்டும் வழங்கப்படுகின்றன. முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்புக்கு 80 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →