சபா மாநிலம், கினாபாத்தாங்கான் அருகே உள்ள குவாமுட் பகுதியில் இன்று அதிகாலை 5.32 மணியளவில் 3.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இது குறித்து மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கம் 5.1° வடக்கு அட்சரேகை, 116.8° கிழக்கு தீர்க்கரேகையில், 118 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இதன் மையப்பகுதி சபாவின் தொங்கொட்டுக்கு தென்மேற்கே சுமார் 34 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவிற்கு சுனாமி ஆபத்து இல்லை என மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
இதனிடையே, இன்று அதிகாலை 5.23 மணியளவில் ஆஸ்திரேலியா அருகே உள்ள லோயல்டி தீவுப் பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
47 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவான இந்த நிலநடுக்கமும் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என மெட்மலேசியா தெரிவித்துள்ளது.








