Oct 12, 2026
Thisaigal NewsYouTube

மகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகத் தனித்து வாழும் தாயார் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகத் தனித்து வாழும் தாயார் மீது குற்றச்சாட்டு

தனது 15 வயது மகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக, 32 வயது தனித்து வாழும் தாயார் மீது கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை, தாமான் யார்லில் (Taman Yarl)) உள்ள ஒரு வீட்டில் இக்குற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. குற்றச்சாட்டை மறுத்த அந்தப் பெண், விசாரணை கோரியுள்ளார்.

2001 ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் கீழ், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் பிணை வழங்கிய நீதிமன்றம், வழக்கை டிசம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →