கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கான கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ், கேஎல்ஐஏ டிரான்சிட் ரயில் சேவைகளில் கேபிள் திருட்டால் பயண நேரம் அதிகரித்து, அட்டவணையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இன்று அதிகாலை வரை, புத்ராஜெயா – சாலாக் திங்கி இடையே இரண்டு சம்பவங்களில் மொத்தம் 260 மீட்டர் சமிக்ஞை கேபிள்கள் திருடப்பட்டுள்ளன.
இதனால், தொழில்நுட்பப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன. பயணிகள் கூடுதல் நேரத்தை ஒதுக்கித் தங்கள் பயணங்களைத் திட்டமிடுமாறு சேவை நிறுவனமான இஆர்எல் கேட்டுக் கொண்டுள்ளது.








