Oct 12, 2026
Thisaigal NewsYouTube

கட்டுப்பாட்டை இழந்த விரைவு பேருந்து பள்ளிவாசல் மீது மோதி விபத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கட்டுப்பாட்டை இழந்த விரைவு பேருந்து பள்ளிவாசல் மீது மோதி விபத்து

கிளந்தான், பாசிர் பூத்தே பகுதியில், இன்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்த விரைவு பேருந்து ஒன்று, தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளிவாசல் மீது மோதி விபத்துக்குள்ளானது.

நெகிரி செம்பிலானிலிருந்து கோத்தா பாருவுக்குச் சென்ற அந்தப் பேருந்து, அதிகாலை 4.50 மணியளவில் ஜாலான் செலிசிங்-கோக் லானாஸ் சாலையின் முதல் கிலோமீட்டரில் விபத்துக்குள்ளானதாக போலீஸ் தெரிவித்தது.

பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பிரேக் போட முயன்றபோது, அது தொடர்ந்து முன்னோக்கிச் சென்று பள்ளிவாசல் மீது மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 1959ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து விதிகளின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →