மலாய்க்காரர்களின் சிறப்புரிமைகளையோ, இஸ்லாமின் நிலைப்பாட்டையோ ஜசெக ஒருபோதும் கேள்வி கேட்டதில்லை என்று அக்கட்சியின் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இஸ்லாமிய மேம்பாட்டுக்கான நிதி 260 கோடி ரிங்கிட்டிலிருந்து 310 கோடி ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டதை அவர் வரவேற்றார். மேலும், சீனப்பள்ளிகளுக்கு 10 கோடி ரிங்கிட், தமிழ்ப்பள்ளிகளுக்கு 5 கோடி ரிங்கிட், முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்புக்கு 8 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டதற்கும் நன்றி தெரிவித்தார்.
இதற்கிடையில், அரசுப் பணிகளில் சீன, இந்திய சமூகத்தினரின் வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் ராயர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.








