Oct 12, 2026
Thisaigal NewsYouTube

கூட்டரசு நெடுஞ்சாலையில் மூன்று கார்கள் மோதி விபத்து; இருவர் பலி, ஐவர் காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கூட்டரசு நெடுஞ்சாலையில் மூன்று கார்கள் மோதி விபத்து; இருவர் பலி, ஐவர் காயம்

கோலாலம்பூரை நோக்கிச் செல்லும் கூட்டரசு நெடுஞ்சாலையின் 18.2ஆவது கிலோமீட்டரில், இன்று நள்ளிரவு மூன்று கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்; மேலும் ஐவர் காயமடைந்தனர்.

ஷா ஆலாம் பகுதியிலிருந்து கோலாலம்பூரை நோக்கிச் சென்ற புரோட்டோன் வீரா கார், கட்டுப்பாட்டை இழந்து வலப்புறத் தடுப்பில் மோதியதைத் தொடர்ந்து, பின்னால் வந்த இரு கார்களும் அதில் மோதியதாகப் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷம்சுடின் மாமாட் தெரிவித்தார்.

புரோட்டோன் வீரா காரை ஓட்டியவரும், அவருடன் பயணித்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →