Oct 12, 2026
Thisaigal NewsYouTube

மோதல் பதற்றம்: கோலாலம்பூர்– ஜெட்டா விமானச் சேவையை ரத்து செய்தது பாத்தேக் ஏர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மோதல் பதற்றம்: கோலாலம்பூர்– ஜெட்டா விமானச் சேவையை ரத்து செய்தது பாத்தேக் ஏர்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழலைத் தொடர்ந்து, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவின் ஜெட்டாவுக்குச் செல்லும் விமானச் சேவையை பாத்தேக் ஏர் இன்று ரத்து செய்துள்ளது.

பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகள் அடுத்த விமானத்தில் பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ரியாத்தில் உள்ள கிங் காலிட் அனைத்துலக விமான நிலையம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, உம்ரா பயணங்களைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது ஹசான் மலேசியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →