நாட்டில் தொடர்ந்து நிலவும் புகைமூட்டம் காரணமாக, ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் புத்ராஜெயாவிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை அக்டோபர் 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் இன்று வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூரில் உலு லங்காட், பெட்டாலிங் பெர்டானா, கோலா லங்காட், சிப்பாங் மாவட்டங்களிலும், பகாங்கில் குவாந்தான், ரொம்பின் மாவட்டங்களிலும் பள்ளிகள் மூடப்படும்.
அதேவேளையில், கோலாலம்பூர், லாபுவான் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும், சிலாங்கூர் மற்றும் பகாங்கின் பாதிக்கப்படாத மாவட்டங்களிலும் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்.
புகைமூட்டம் பாதித்த பகுதிகளில் வெளிப்புற நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், வெளியே செல்லும்போது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பொருத்தமான முகக்கவசங்களை அணியவும் கல்வி அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். பள்ளிகள் மூடப்படுவது தொடர்பான உடனுக்குடன் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.








