Oct 16, 2026
Thisaigal NewsYouTube

தாவாவில் நில நடுக்கம், பல இடங்களில் உணரப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தாவாவில் நில நடுக்கம், பல இடங்களில் உணரப்பட்டது

தாவாவ், டிச.5-


சபா, தாவாவில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 4.54 மணியளவில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் அது 2.7 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம், தாவாவிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் 4.5 டிகிரியிலும், கிழக்கே 118.1 டிகிரியிலும் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா தெரிவித்துள்ளது.

இந்த மிதமான நில நடுக்கம், பல இடங்களில் உணரப்பட்டப் போதிலும் இதனால் எந்தவொரு அசம்பாவிதமும் நிகழவில்லை என்று சபா, தீயணைப்பு, மீட்புப்படை இலாகா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →