Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அரசியல் கருத்துவேறுபாட்டை பகைமையின் ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது
தற்போதைய செய்திகள்

அரசியல் கருத்துவேறுபாட்டை பகைமையின் ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது

Share:

ஒருவருக்கொருவர் இடையில் நிலவி வரும் அரசியல் கருத்துவேறுபாட்டை, பகைமையின் ஆயுதமாகவும், அவதூறுகளின் ஊற்றுக்கண்ணாகவும் பயன்படுத்தக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
பகைமையும், அவதூறுகளும் மேலோங்கி, ஒருவருக்கொருவர் இரு துருவங்களாக பிரிந்து கிடப்பதைவிட நாட்டின் நன்மையைக் கருத்தில் கொண்டு, ஆக்கப்பூர்வமான யோசனைகளையும், பரிந்துரைகளையும் ஒருவருக்கொருவர் முன் வைக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றப் பின்னர் நாட்டிற்கு நன்மை அளிக்கக்கூடிய சிறப்பான, ஆக்கப்பூர்மான பரிந்துரைகளை தாம் இன்னும் கேட்கவில்லை என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இன்று நீலாயில் புறநகர் தொழில்முனைவர்களுக்கான கண்காட்சியை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.
அமைச்சரவைக்கூட்டத்தில்கூட அமைச்சர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன. அப்படியிருந்தும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இறுதியில் ஒரு முடிவை எடுக்க கட்டாயம் ஏற்படுகிறது என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் பக்காத்தான் ஹராப்பானுக்கும், பாரிசான் நேஷனலுக்கும் இடையிலான உறவு நன்றாக இல்லை என்பது உண்மைதான். ஆனால், நல்லுறவு மலர இன்னும் காலம் தேவைப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

Related News