வீட்டிலிருந்து காணாமல் போனதாக கூறப்பட்ட ஆறு வயது சிறுவன், அவரது வீட்டிற்கு அருகிலுள்ள செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் நேற்று மாலை பேராக் மாநிலத்தின் ஹூத்தான் மெலிந்தாங் பகுதியில் உள்ள கம்பங் பாரு, சுங்கை சுமுன்னில் நிகழ்ந்தது.
இது குறித்து பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் சபரோட்சி நூர் அகமட் கூறுகையில், நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் சிறுவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தை அடைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த தேடுதல் நடிவடிக்கையின் போது, அச்சிறுவன் வீட்டின் அருகில் இருந்த செம்பனைத் தோட்ட வடிகாலில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








