Oct 16, 2026
Thisaigal NewsYouTube

வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம்: மூன்று ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம்: மூன்று ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

டிச. 24-

கடந்த அக்டோபர் மாதம் வழக்கறிஞர் ஒருவர், கும்பல் ஒன்றினால் இரும்புத் தடியினால் தாக்கப்பட்டு, காயப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று ஆடவர்கள் இன்று ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

36 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூன்று சீன ஆடவர்கள், மாஜிஸ்திரேட் Nadratun Naim Saidi முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் பினாங்கு, Persiaran Karpal Singh சாலையோரத்தில் இன்னும் பிடிப்படாமல் இருக்கும் மேலும் ஒரு நபருடன் கூட்டாக சேர்ந்து 37 வயது வழக்கறிஞர் Beh Hong Shein என்பவரை இரும்புத் தடியினால் தாக்கி காயப்படுத்தியதாக அந்த மூவர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

விற்பனை அதிகாரிகளான அந்த மூவரும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் கூடியப் பட்சம் 10 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்