Apr 4, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் மசீச தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக் காலமானார்
தற்போதைய செய்திகள்

முன்னாள் மசீச தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக் காலமானார்

Share:

முன்னாள் மசீச கட்சித் தலைவர் லிங் லியோங் சிக் இன்று காலை தனது 82-வது வயதில் காலமானார்.

இத்தகவலை தற்போதைய மசீச தலைவர் வீ கா சியோங் உறுதிப்படுத்தியுள்ளார்.

மறைந்த லிங் லியோங் சிக் அரசாங்கத்தில் பல முக்கிய பதவிகள் வகித்துள்ளார்.

குறிப்பாக 1986 முதல் 2003-ஆம் ஆண்டு வரையில் போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்த அவர், அதே காலக்கட்டத்தில் மசீச கட்சித் தலைவராகவும் செயல்பட்டார்.

கோலாகங்சார் பகுதியில் பிறந்த அவர், ராயல் மிலிட்டரி கல்லூரியில் கல்வி பயின்றார்.

கடந்த 1974-ஆம் ஆண்டு மாதா கூச்சிங் என்றழைக்கப்பட்ட தற்போதைய பாகன் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1978 மற்றும் 1982-ஆம் ஆண்டு தேர்தல்களிலும் தனது இடத்தை தக்க வைத்தார்.

பின்னர் 1986-ஆம் ஆண்டு லாபிஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நான்கு முறை அப் பதவியைத் தக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பினாங்கு எல்ஆர்டி திட்டம்: பலகைத் தூண்கள் தயாரிக்கும் தளம் 90 விழுக்காடு நிறைவு - கட்டுமானப் பணிகள் தீவிரம்

பினாங்கு எல்ஆர்டி திட்டம்: பலகைத் தூண்கள் தயாரிக்கும் தளம் 90 விழுக்காடு நிறைவு - கட்டுமானப் பணிகள் தீவிரம்

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் நோன்புப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு.

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் நோன்புப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு.

பொய்யான தகவல்களைப் பரப்பும் 159 உள்ளடக்கங்களை எம்சிஎம்சி நீக்கியது

பொய்யான தகவல்களைப் பரப்பும் 159 உள்ளடக்கங்களை எம்சிஎம்சி நீக்கியது

இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக நில்லுங்கள் - இளைஞர்களுக்கு அன்வார் அறிவுறுத்து

இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக நில்லுங்கள் - இளைஞர்களுக்கு அன்வார் அறிவுறுத்து

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு