Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சீன குடிமக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும்
தற்போதைய செய்திகள்

சீன குடிமக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும்

Share:

மலேசியாவிற்கு வருகை புரியும் சீனநாட்டு குடிமக்களின் நியாயமான உரிமைகள் மற்றும் அவர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் கோலாலம்பூரில் உள்ள சீனத் தூதரகம் மேற்கொள்ளும் என்று இன்று உறுதி தெரிவித்துள்ளது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை சீனநாட்டுப் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலை தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களுடன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

சீனநாட்டுப் பெண்மணி ஒருவர், மலேசிய குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டதாக கூறபடும் சம்பவம் தொடர்பில் சீனத் தூதரகம் எதிர்வினையாற்றியுள்ளது

Related News