Jun 27, 2026
Thisaigal NewsYouTube
ஆஸ்திரேலிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஹோட்டல் ஊழியருக்கு 12 ஆண்டுகள் சிறை
தற்போதைய செய்திகள்

ஆஸ்திரேலிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஹோட்டல் ஊழியருக்கு 12 ஆண்டுகள் சிறை

Share:

பினாங்கில், கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, இயற்கைக்கு மாறான பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் ஹோட்டல் பாதுகாவலர் எஸ். பிரசாந்த் என்பவருக்கு, ஜார்ஜ் டவுன் செஷன்ஸ் நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதித்துள்ளது.

இந்த இரண்டு தண்டனைகளும் ஒரே நேரத்தில் விதிக்கப்பட்டுள்ளதால், அவர் மொத்தமாக 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளையும் அனுபவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி பிரசாந்த் மீது இக்குற்றச்சாட்டானது சுமத்தப்பட்டது.

முதலில் தம் மீதான குற்றச்சாட்டை மறுத்த அவர், பின்னர், கடந்த ஜூன் 24-ஆம் தேதி, நீதிமன்றத்தில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, இந்த தண்டனையானது விதிக்கப்பட்டுள்ளது.

Related News