Jun 27, 2026
Thisaigal NewsYouTube
மச்சாப்பில் ஒன் ஹஃபிஸ் வேட்புமனு தாக்கல்: சாஹிட், கைரி, ஹிஷாமுடின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பு
தற்போதைய செய்திகள்

மச்சாப்பில் ஒன் ஹஃபிஸ் வேட்புமனு தாக்கல்: சாஹிட், கைரி, ஹிஷாமுடின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

Share:

ஜோகூர் மாநில பாரிசான் நேஷனல் தலைவரான டத்தோ ஒன் ஹஃபிஸ் காசி, தமது ஆதரவாளர்களுடன் பெரும் திரளாக வந்து, மச்சாப் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான தமது வேட்புமனுவை இன்று காலை தாக்கல் செய்தார்.

பாரிசான் நேஷனல் கூட்டணியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் அவருக்குத் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்ததால், இந்நிகழ்வானது, நட்சத்திரப் பட்டாளத்தின் அணிவகுப்பு போல் அமைந்தது.

மேலும், முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர்களான ஹிஷாமுடின் ஹுசேன், கைரி ஜமாலுதீன் மற்றும் ஜோகூர் மாநில முன்னாள் மந்திரி பெசார் ஹஸ்னி முகமட் ஆகியோரும் ஒன் ஹஃபிஸ் உடன் இணைந்து வந்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

இதனிடையே, பாரிசான் நேஷனல் ஆதரவாளர்கள் இன்று காலை 8 மணி முதலே கூட்டணியின் செயல்பாட்டு மையத்தில் திரள தொடங்கினர்.

அதன் பின்னர் அவர்கள், சிம்பாங் ரெங்கம் நகராண்மைக் கழகக் கட்டிடத்தில் அமைந்திருந்த வேட்புமனு தாக்கல் மையம் நோக்கி பேரணியாகச் சென்று தங்களது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு, ஜோகூர் மாநிலத் தேர்தலில் மச்சாப் தொகுதியில் 6,543 வாக்குகள் பெரும்பான்மையில் ஒன் ஹஃபிஸ் வெற்றி பெற்றிருந்தார்.

இம்முறை மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முன்கூட்டியே வாக்குப்பதிவு வரும் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News