கோலாலம்பூர், ஆகஸ்ட்.12-
தாம் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பிரமருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள், We Love PMX என்று கூறும்படி சிறார்களை வலியுறுத்தியிருக்கும் கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக்கை முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி கடுமையாகச் சாடினார்.
கல்வி அமைச்சரின் அந்தக் காணொளி வைரலாகியிருப்பது குறித்து கருத்துரைத்த ரஃபிஸி, இது தவறான முன்னுதாரணமாகும் என்றார்.
ஒவ்வொரு தலைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்து, நான் பிரதமரை நேசிக்கிறேன் என்று இப்போதே சிறார்களுக்கு போதிப்போம் என்றால் அடுத்து கல்வி அமைச்சுக்கு வரக்கூடிய அமைச்சர்களும் இந்த வேலையைதான் செய்வார்கள். அப்போது அவர்களை நாம் குறை கூற முடியுமா? என்று ரஃபிஸி கேள்வி எழுப்பினார்.








