Dec 4, 2025
Thisaigal NewsYouTube
லோரி ஓட்டுநரின் மரணத்தில் குற்றத்தன்மையில்லை
தற்போதைய செய்திகள்

லோரி ஓட்டுநரின் மரணத்தில் குற்றத்தன்மையில்லை

Share:

பேரா, லெங்கோங் அருகில் அயேர் காலா வாரியத்தின் பயன்படுத்தப்படாத ஈயக்குட்டை ஒன்றில் லோரி ஓட்டுநர் ஒருவர் இறந்து கிடந்தது, குற்றத்தன்மை இல்லை என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

உள்ளூர் பிரஜையான 33 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர் நீரில் மூழ்கி மரணம் அடைந்துள்ளார் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக கெரிக் மாவட்ட போலீஸ் தலைவர்கண்காணிப்பாளர் சுல்கிப்லி மஹ்மூத் தெரிவித்தார். தனது லோரியில் மணலை ஏற்றிக்கொண்டு அந்த லோரி ஓட்டுநர் சென்றுள்ளார்.

அந்த குளத்திற்கு லோரி அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த குளத்தில் அவர் தவறி விழுந்ததற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை என்று சுல்கிப்லி மஹ்மூத் குறிப்பிட்டுள்ளார்.

Related News