Jul 2, 2026
Thisaigal NewsYouTube
அபராதம் செலுத்தாத வெளிநாட்டு வாகனங்களுக்கு சிங்கப்பூர் தடை
தற்போதைய செய்திகள்

அபராதம் செலுத்தாத வெளிநாட்டு வாகனங்களுக்கு சிங்கப்பூர் தடை

Share:

சிங்கப்பூரில் போக்குவரத்து, வாகன நிறுத்தம் அல்லது புகை உமிழ்வு தொடர்பான அபராதங்களைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள வெளிநாட்டு வாகனங்களுக்கு, வரும் நவம்பர் 2 ஆம் தேதி முதல் வாகன நுழைவு அனுமதியான வி.இ.பி. மற்றும் அதனைப் புதுப்பிக்கும் அனுமதிகள் மறுக்கப்படும். தற்போதைய நடைமுறைப்படி, அபராதம் செலுத்தாத வாகனங்கள் சிங்கப்பூர் எல்லைச் சோதனைச் சாவடிகளுக்கு வந்த பிறகே அவற்றின் நுழைவு மறுக்கப்படுகிறது.

புதிய விதியின்படி, வெளிநாட்டு வாகன ஓட்டிகள் தங்களின் VEP அனுமதிக்கு விண்ணப்பிக்கும் முன்பே axs.com.sg என்ற இணையதளத்தில் நிலுவை அபராதங்களைச் சரிபார்த்துச் செலுத்த வேண்டும். அதன் பின்னரே எல்.டி.ஏ ஒன்மோட்டரிங் இணையதளத்தில் நுழைவு அனுமதியைப் புதுப்பித்து சிங்கப்பூருக்குள் நுழைய முடியும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Related News

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்