Jul 15, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை
தற்போதைய செய்திகள்

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

Share:

ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் பெர்லிங் தொகுதியில் ஏற்பட்டுள்ள முன்முனைப் போட்டியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக அலன் தீ பூன் சோங் போட்டியிடுகிறார்.

விவசாய மற்றும் ரப்பர் பால் வெட்டும் எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த அலன் தீ பூன் சோங், மக்களின் அடிமட்டப் பிரச்சினைகளைத் தன் வாழ்வியல் அனுபவத்தின் மூலம் நன்கு அறிந்த ஒரு களப் போராளியாவார். கடந்த 2018 முதல் 2022 வரை செனாய் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலக்கட்டத்தில், சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்ததுடன், கிராமப்புறப் பகுதிகளைத் தேசிய அளவிலான சுற்றுலாத் தலங்களாகவும் மாற்றித் திறம்பட முத்திரை பதித்தவர்.

'பெர்சே' மக்கள் இயக்கங்கள் மூலம் நாட்டின் ஜனநாயகக் காவலராகத் திகழும் இவர், யோங் பெங் தொகுதியில் குடியுரிமை இல்லாத நூற்றுக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்குச் சட்டப்பூர்வமாகப் பள்ளிக் கல்வியை மீட்டுக் கொடுத்துள்ளார். தற்போது பெர்லிங் தொகுதியில் களம் காணும் அலன் தீ பூன் சோங், ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் முழுப் பலன்களையும் உள்ளூர் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதுடன், இத்தொகுதியை ஒரு முன்மாதிரித் தொகுதியாக மாற்றுவதைத் தனது முக்கியத் தேர்தல் வாக்குறுதியாகக் கொண்டுள்ளார்.

பெர்லிங் தொகுதியில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கத் துடிக்கும் அலன் தீ பூன் சோங், தற்பொழுது தொகுதி மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்று வருகிறார்.

Related News