Aug 10, 2026
Thisaigal NewsYouTube
439 வீடுகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

439 வீடுகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.06-

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்ட பெர்சியாரன் ஹார்மோனி சுற்றுப்புறத்தில் உள்ள 439 வீடுகளை அதிகாரிகள் மதிப்பீடு செய்திருக்கின்றனர். இதில் 220 வீடுகள் பாதுகாப்பானவை என்றும், 320 வீடுகள் இன்று முதல் பழுதுபார்த்து குடியிருக்கலாம் என்றும் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

வெடிப்பு ஏற்பட்ட இடத்திலிருந்து 325 மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளின் கட்டமைப்பு மலேசிய தீயணைப்பு - மீட்புத் துறையால் மதிப்பிடப்பட்டது. பாதிக்கப்பட்ட 219 வீடுகளில், 87 வீடுகள் 20 விழுக்காட்டிற்கும் அதிகமாக பெரிய சேதமடைந்தவையாகவும், 132 வீடுகள் 20 விழுக்காட்டிற்கும் குறைவான சிறிய சேதமடைந்தவையாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 151 வீடுகள் மீண்டும் குடியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன, இதில் கம்போங் கோல சுங்கை பாருவில் உள்ள 21 வீடுகளும் அடங்கும். பொதுப்பணித்துறை, தீயணைப்பு - மீட்புத் துறை, டிஎன்பி ஆகியவற்றால் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்பானவை என சான்றளிக்கப்பட்ட வீடுகளுக்கு மட்டுமே மின்சாரமும் தண்ணீர் விநியோகமும் வழங்கப்பட்டு மீண்டும் குடியிருக்க அனுமதிக்கப்படும். இன்று வரை 40 வீடுகளில் குடியிருப்பாளர்கள் மீண்டும் குடியேறிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி