Sep 15, 2026
Thisaigal NewsYouTube
சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி
தற்போதைய செய்திகள்

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

Share:

வோங் சென், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதுடன், சுபாங் நாடாளுமன்றத் தொகுதியையும் காலி செய்துள்ளார். அவரது பதவி விலகல் இன்று மாலை 5 மணி முதல் அமலுக்கு வருகிறது.

2018-ஆம் ஆண்டு முதல் சுபாங் தொகுதி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த வோங் சென், 2018 மற்றும் 2022 பொதுத் தேர்தல்களில் பிகேஆர் வேட்பாளராக போட்டியிட்டு தொகுதியைத் தக்கவைத்திருந்தார்.

கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி நாடாளுமன்ற சபாநாயகர் ஜொஹாரி அப்துலிடம் சமர்ப்பித்த பதவி விலகல் கடிதத்தையும் அவர் ஃபேஸ்புக்-ல் வெளியிட்டுள்ளார்.

Related News