Sep 15, 2026
Thisaigal NewsYouTube
எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்
தற்போதைய செய்திகள்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

Share:

எல் நினோ காலத்தில் நீர்மட்டம் குறைவதால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க, நாடு முழுவதும் பல்வேறு திறன் கொண்ட 606 அவசரகால கையடக்க நீர் இறைப்பான்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை தெரிவித்துள்ளது.

ஆறுகள் அல்லது அணைகளின் நீர்மட்டம் ஆபத்தான அளவுக்குக் குறைந்தால், இந்த நீர் இறைப்பான்கள் விவசாயப் பகுதிகள் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு நீரை வழங்கவும், நீர் விநியோகம் தடைப்படும் பகுதிகளுக்கு உதவவும் பயன்படுத்தப்படும்.

அனைத்து இறைப்பான்களும் 24 மணி நேரத்துக்குள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படும் வகையில் தயாராக இருப்பதாகத் நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

Related News