Sep 12, 2026
Thisaigal NewsYouTube
தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.
தற்போதைய செய்திகள்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

Share:

பினாங்கு தீவில், தானியங்கி வாகனப் பதிவு எண் அடையாளம் காணும் ஏ.என்.பி.ஆர் முறையில், குறிக்கப்பட்ட பார்க்கிங் இடங்களுக்கு வெளியே வாகனங்களை நிறுத்தியதாக விதிக்கப்பட்ட அனைத்து அபராதங்களும் ரத்து செய்யப்படுவதாக பினாங்கு ஊராட்சித்துறை விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் ஜேசன் ஹங் மூய் லாய் தெரிவித்துள்ளார்.

பயணிகளை ஏற்ற அல்லது இறக்குவதற்காக வாகனங்கள் சிறிது நேரம் மட்டுமே நிறுத்தப்பட்டிருந்தாலும், அதை ஏ.என்.பி.ஆர் முறையால் கண்டறிய முடியாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஏற்கனவே இந்த அபராதங்களைச் செலுத்தியவர்கள், வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் எம்.பீ.பி.பி அல்லது எம்.பீ.எஸ்.பி மூலம் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்.

இதற்கு அபராதம் செலுத்திய ரசீது மற்றும் வங்கிக் கணக்கு அறிக்கையின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

இனி, குறிக்கப்பட்ட இடங்களுக்கு வெளியே வாகனங்கள் நிறுத்தப்படுவது தொடர்பான அமலாக்க நடவடிக்கைகள், உள்ளாட்சி அதிகாரிகளால் நேரடியாகக் கண்காணிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும்.

எனினும், பார்க்கிங் அல்லது வாகன நிறுத்தம் முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு இந்த விலக்கு பொருந்தாது என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி