Sep 14, 2026
Thisaigal NewsYouTube
அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி
தற்போதைய செய்திகள்

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

Share:

சிலாங்கூர் எதிர்க்கட்சித் தலைவர் முகமட் அஸ்மின் அலி, சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரியை “என் தம்பி” என்றும், மாநில சட்டமன்ற சபாநாயகர் ங் சூயி லிம்மை “என் நண்பர்” என்றும் குறிப்பிட்டது கவனம் பெற்றுள்ளது.

சிலாங்கூர் சட்டமன்றத்தில் உரையாற்றிய அஸ்மின் அலி, “அமிருடின் என் தம்பி, ங் சூயி லிம் என் நண்பர், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஆர். ஜோர்ஜ் என் தோழர்” என்று கூறினார்.

மேலும், அமிருடின் கவலைப்படாமல் சிலாங்கூரின் வளர்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும், அவர் தனியாக இல்லை என்றும் அஸ்மின் தெரிவித்தார்.

இதனிடையே, மலாய் ஒற்றுமை மற்றும் மலாய் மேலாதிக்கம் குறித்து முழங்கும் சில தரப்புகள், சில முக்கிய மலாய் நிறுவனங்களின் வீழ்ச்சிக்கும் நிதி முறைகேடுகளுக்கும் காரணமாக இருந்ததாக அஸ்மின் குற்றஞ்சாட்டினார்.

ஃபேல்டா, தாபோங் ஹாஜி, எல்.டி.ஏ.டி மற்றும் 1 எம்.டீ.பீ விவகாரங்களை அவர் குறிப்பிட்டார். எனினும், எந்தக் கட்சி அல்லது அரசியல் கூட்டணியையும் அஸ்மின் நேரடியாகக் குறிப்பிடவில்லை.

Related News